Friday, November 1, 2013

நாம் ஏன் கோவிலுக்குப் போகணும்?


கோவில்கள் எங்கு பூமியின் காந்த அலை அடர்த்தியாக ஓடுகிறதோ அங்கு கட்டப்படுகின்றன. அது கிராமமாகவோ, நகரமாகவோ, மலை மீதோ எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். பூமியின் வட தென் துருவ காந்த அலை எங்கு அதிகமாக உள்ளதோ அங்கு கட்டப்படுகின்றன. முக்கியமான கடவுள் இருக்குமிடமான கர்ப்பகிரகம் (அ) மூலஸ்தானத்தில் இந்த அலை அதிகமாக இருக்கும்.  சரியாகச் சொல்வதெனில் இந்த மூலஸ்தானத்தில் சிலை இடம் பெற்ற பிறகே கோவிலின் அமைப்பு கட்டப்படும். இந்த இடத்தில் தாமிரத் தகடுகள் வேத வரிகளைச் செதுக்கி புதைக்கப்படும். 

இவ்வாறு ஏன் செய்கிறார்கள் என்றால் காந்த அலைகளை அது சுற்றிலும் பரப்பவே. எனவே ஒருவர் தொடர்ந்து கோவிலுக்கு சென்று சிலையை வலப்புறமாக சுற்றி வந்தால் அவர் பூமியின் காந்த ஆற்றலைப் பெறுவார். அவரின் உடல் அந்த ஆற்றலை கிரகித்துக் கொள்ளும். இவ்வாற்றல் அவர் நலமுடன் வாழ வழி வகுக்கும். இது அறிவியல் பூர்வமான உண்மை. 

மேலும் கர்ப்பக்கிரகம் மூன்று திசையிலும் மூடப்பட்டுள்ளதால் ஆற்றலை அதிகப்படுத்தும். மூலஸ்தானத்திலிருக்கும் விளக்கும் வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தும். மணியோசை பக்தர்களின் மனதினை அலைபாய விடாமல் ஒன்றியிருக்கச் செய்யும். இது மன அழுத்தினைக் குறைக்கும். 


மேலும் மணம் வீசும் மலர்கள் ஒருவிதமான  நல்ல ஆராவை (Aura – ஒருவரைச் சுற்றியுள்ள மனித காந்த சக்தி) வெளிப்படுத்தும். கடவுளின் சிலைகளை கற்பூரம், துளசி மற்றும் பிற பொருள்களைச் சேர்த்து கழுவி அந்த நீரை தீர்த்தமாகத்தருவார்கள். அதில் மிக அதிகமான காந்த சக்தியுள்ளது.  அத்தீர்த்தத்தினை தாமிரப் பாத்திரத்திலிட்டுத் தருவார்கள்.  இதன் மூலம் நமது முன்னோர்கள் பல நோய்களைக் குணப்படுத்தியுள்ளார்கள்

மேலும் தீபாரதனை காட்டும் போது மிக அதிகமான சக்தி வெளிப்படும் எனவேதான் ஆண்களை சட்டையில்லாமலும் பெண்களை அதிக அணிகலன்களோடும் கோவிலுக்கு வரச் சொன்னார்கள்.

                      

மனிதன் நலமுடன் வாழ

மனிதன் நலமுடன் வாழ தேவையான நலங்கள் அனைத்தும் மனவளக்கலையில் உள்ளது.
1.உடல் நலம் - PHYSICAL HEALTH - SIMPLIFIED EXERCISE
 அருட்தந்தை  வேதாத்திரி மகரிஷி அவர்கள் எளிய முறை உடற்பயிற்சியில்
  • கைப் பயிற்சி
  • கால் பயிற்சி
  • தசைநார், நுரையீரல் பயிற்சி
  • கண் பயிற்சி
  • கபாலபதி
  • மகராசனம்
  • அக்கு பிரஷர்,
  •  மசாஜ் பயிற்சி
  • உடல் தளர்த்தல்
ஆகிய பயிற்சிகள் கற்றுத்தரப்படுகின்றன.
2.உயிர்வளம் - LIFE FORCE HEALTH - KAYA KALPA EXERCISE
காயகல்பம் உயிருக்கான பயிற்சி.
3.மனவளம் - MENTAL HEALTH - அகத்தவம்
  • ஆக்கினை
  • சாந்தி
  • துரியம்
  • துரியாதீதம்
  • பஞ்சேந்திரியம்
  • பஞ்சபூதநவக்கிரகம்
  • ஒன்பதுமையம்
  • நித்தியானந்தம்
  • இறைநிலை தவம்                                                                                                                                                                                                                                                   
4.சமுதாய நலம் - SOCIAL HEALTH - அகத்தாய்வு
  • எண்ணம் ஆராய்தல்
  • ஆசை சீரமைத்தல்
  • சினம் தவிர்த்தல்
  • கவலை ஒழித்தல்
  • நான் யார்?
 5.ஆன்மீக நலம் - SPIRITUAL HEALTH -       பிரம்மஞானம்
இறைநிலை உணரும் பயிற்சி

அருட்தந்தை  வேதாத்திரி மகரிஷி அவர்கள் அளித்த வாழ்வியல் பயிற்சிகளை முழுமையாக கற்போம்.

Thursday, October 24, 2013

மூளையும் அதன் அதிர்வுகளும்


மருத்துவ அடிப்படையில் மூளை அதிர்வுகளை அளந்து ஆய்வு செய்வதற்கு எலக்ட்ரோ என்ஸபலோ கிராபி – Electro –Encephalo- graphy” என்பார்கள். பொதுவாக மூளையின் அதிர்வுகள் வினாடிக்கு 1 முதல் 40 அலைகள் இருக்கும் அதை மருத்துவத்திலும், மறை பொருளிலும் எப்படி பகுத்து ஆயலாம் என பார்ப்போம்.

 
மருத்துவத்தில்
1. ”டெல்டா – Delta” 1 முதல் 4 அலைகள்.
2. “தீட்டா - Theta” 5 முதல் 7 அலைகள்.
3. “அல்பா – Alpha” 8 முதல் 12 அலைகள்
4. “பீட்டா 1 – Beta 1 ” 13 முதல் 20 அலைகள்.
5. “பீட்டா 2 – Beta 2” 21 முதல் 40 அலைகள்.
6. “க்காமா – Gamma” 41 அலைகளுக்கு மேல்.
மறை பொருளில்
1 ”டெல்டா – Delta” 0 அலை இறைநிலை-அமைதி-சமாதி.
2 ”டெல்டா – Delta” 1 முதல் 4 அலைகள் ஞானம் மிக ஆழ்நிலை தியானம்
3 “தீட்டா - Theta” 5 முதல் 7 அலைகள்.- சித்து (சித்தர்கள்) ஆழ்நிலை தியானம்.
4 “அல்பா – Alpha” 8 முதல் 12 அலைகள் அல்பா தியானம்- நமது சுற்று புறத்தின் கூர்ந்த அறிவு. மாணவர்களுக்கு மிக நல்ல தியானம்
5 “பீட்டா 1 – Beta 1 ” 13 முதல் 20 அலைகள். நாம் சாதராணமாக விழித்து இருக்கும் நிலை.
6 “பீட்டா 2 – Beta 2” 21 முதல் 40 அலைகள். நாம் பதட்டபடும் நிலை.
7 “க்காமா – Gamma” 41 அலைகளுக்கு மேல். ஆய்வுக்கு அப்பாற்பட்ட நிலை